நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. மெய்யப்ப செட்டியார், ஏவி.எம். சரவணன் உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான்களுடனான நட்பை, நயத்தக்க நாகரிகத்துடன் அவர் விவரித்துள்ள பாங்கு, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றிய அரிய, வியப்பளிக்கும் தகவல்கள் எளிமையான மொழிநடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. திரைத்துறை பற்றிய ஆர்வம் இல்லாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தை வாசித்தால் வசீகரிக்கப்படுவார்கள். நன்றி: தினமணி, 11/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *