பேசும் ஓவியம்

பேசும் ஓவியம், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.

கூடவே பயணிக்கும் கதை கதைகளுக்கு அபார சக்தி இருக்கிறது. கதைகளே வாசிப்பிற்கான தூண்டுதல். குழந்தைப் பருவத்தில் கதைகள் கேட்டு வளரும் குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை நாம் நம் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும். அதற்கான சிறு முயற்சி இது எனலாம். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், புத்தகங்கள் பல ஆங்கிலத்தில் வெளிவருகின்ற இச்சூழலில், தமிழில் வெளிவந்திருக்கும் பேசும் ஓவியம் வீட்டிலும், பள்ளி நூலகங்களிலும் இருக்க வேண்டிய ஒரு புத்தகம். குழந்தை இலக்கியத்தில் எழுத்தாளர்களுக்குக் கூடுதல் பொறுப்புணர்வும், கடமையும் இருக்கிறது. அதை உணர்ந்ததால் ஆசிரியரின்  இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் 16ம் படிக்கும் குழந்தைகளுக்குச் சமூக விழிப்புணர்வுக் கருத்துகளும், தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதைகளையும், வாழ்க்கை மீதான நேசிப்பையும் கொடுக்கும் விதத்தில் எழுதியுள்ளார். இத்தொகுப்பு சிறுவர்களுக்கு மட்டுமில்லை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம். இக்காலக் குழந்தைகளுக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது பிடிக்காது. கதைகள் மூலம் அறிவுறுத்துவது எளிது. அதை ஆசிரியர் 16 சிறுகதைகள் மூலம் மிக அழகாகச் செய்திருக்கிறார். நன்றி: கல்கி, 6/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *