மாற்று சினிமா
மாற்று சினிமா, கிராபியென் ப்ளாக், புதிய கோணம் வெளியீடு, 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 18, விலை 90 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-487-7.html
‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக தமிழில் நிகழ்ந்து வருகிறது. இன்னொருபுறம் வெகுஜன சினிமாவில் வாழ்வின் எதார்த்தத்தை நெருங்கிச் சென்று தொடும் பல இளைய தலைமுறை இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் பழைய இலக்கணங்களை மாற்றி அமைக்கிறார்கள். தமிழில் முக்கியமான மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை, இந்த நூலில் கிராபியன் ப்ளாக் விரிவாக அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படங்களின் கதையோட்டம், காட்சியமைப்புகள் பற்றி நுட்பமாக விவாதிக்கிறார். இப்படியான முயற்சிகள் சில நூறு பேரால் பார்க்கப்பட்டு மறைந்துவிடாமல் நிலைக்க இதுபோன்ற புத்தகங்கள் பெரிதும் உதவும். நன்றி: குங்குமம் 20/10/12