முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம்

முக்கிய சினிமாக்கள் பற்றிய சுவையான கண்ணோட்டம், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.

இலங்கையைச் சேர்ந்த கே.எஸ். சிவகுமாரன் பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த உலகப் பட விழாக்களில் பங்கு கொண்டு அங்கு திரையிடப்பட்ட சிறந்த படங்களை பார்த்து ரசித்தவர். அவர் தமது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் எழுதியுள்ளா புத்தகம் இது. உலகப் பட விழாக்களில் பாராட்டப்பட்ட சிவகுமார், ராதா நடித்த ‘மறுபக்கம்’, கமல்ஹாசன், ரேவதி நடித்த ‘மகளிர் மட்டும்’, அஜித், தேவையாணி நடித்த ‘காதல் கோட்டை’ ஆகிய தமிழ் படங்கள் பற்றியும் மற்றும் பல்வேறு மொழிப்படங்களின் சிறப்பு பற்றியும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இப்போது ஈரானியப் படங்கள் உலகின் கவனத்தைக் கவர்ந்துள்ளன. அதுபற்றியும் எழுதியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 23/12/2015.  

—-

கணவனின் காதலி, ஜோ, ஹலோ பப்ளிகேஷன்ஸ், திருச்சி, விலை 350ரூ.

திருமணத்திற்கு பிறகு கணவன் ஒரு பெண்ணை காதலிப்பதால் ஒரு குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது. மனைவி என்னென்ன நினைக்கிறார் என்பதை “கணவனின் காதலி” என்ற புத்தகத்தின் மூலம் விளக்கியிருக்கிறார் நூல் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 23/12/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *