வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும்
வள்ளுவர் வாக்கும் வாழ்வியல் நிஜங்களும், சி.வி. மலையன், மேகலா பதிப்பகம், பக். 280, விலை 150ரூ.
இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் நடந்த சமீபகால சில நிகழ்வுகள் பற்றி, தினமலர் முதலான சில நாளிதழ்களில் வெளியான செய்திகளைக் கருவாகக் கொண்டு, அந்த நிகழ்வுகளோடு திருக்குறட்பாக்களை பொருத்திக் காட்டுகிறது இந்த நூல். மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சுவினை எனும் குறட்பாவுக்கு இந்து, முஸ்லிம் பெண்கள் முறையே முஸ்லிம், இந்து பெண்களின் கணவர்களுக்கு, தங்களின் சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நிகழ்வையும், பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான்கண் படின் எனும் குறட்பாவிற்கு தான் அரிதின் முயன்று ஈட்டிய, 80 கோடி ரூபாயை தன் சொந்த கிராமத்திற்கு வழங்கிய டாக்டர் பற்றிய செய்தியையும், உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் குறட்பாவிற்கு ஓர் ஆட்டோ ஓட்டுநரின் தமிழ்த் தொண்டையும் சான்றாக காட்டுகிறது இந்த நூல். நன்றி: தினமலர்,14/9/2014.
—-
யார் அறிவாளி, பாபநாசம் குறள்பித்தன், ஆப்பிள் பப்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 50ரூ.
சிறுவர்களுக்காக எழுதப்பட்ட 16 கதைகளின் தொகுப்பாகும். கதைகள் சிறந்த வாழவியல் கருத்துக்களை அழகிய உவமைகளுடனும், ஓவியங்களுடனும், இலக்கியச் செறிவு மிக்க வகையில் எழுதப்பட்டிருப்பதால் சிறுவர்களுக்கு பயனள்ள வகையில் நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.