அணுசக்தி அவசியமா? ஆபத்தா?

செட்டிநாட்டுப் பகுதியில் ஒரு பண்பாட்டுச் சுற்றுலா, மணிமேகலைப் பிரசுரம், 7/4, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 100.

அழகப்பா பல்கலைக்கழகம் ‘செட்டி நாட்டுப் பாரம்பரிய சுற்றுலா வளர்ச்சியில் நகரத்தார் பண்பாட்டின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. நகரத்தாரின் வரலாறு, வாழ்க்கை முறை, செட்டிநாட்டுக் கலைகள், சடங்குகள் என்று சுவையான பல செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன.  

 

அணுசக்தி அவசியமா? ஆபத்தா?, க.சிவஞானம், 1, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானிஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14.  விலை  ரூ. 60.

அணுசக்தியின் வரலாறு, அதன் நன்மை, தீமைகள் பற்றி எளிமையான நடையில் விளக்கும் நூல். அணுகுண்டு தயாரிப்பதற்கு உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் போட்டி குறித்தும் உரிய படங்களுடன் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. அணுசக்தி தேவையா, தேவை இல்லையா என்று விரிவாக அலசி, முடிவு சொல்கிறார் ஆசிரியர்.  

 

கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர், எஸ். ஜெகன்னாதன், மேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை – 17.  விலை  ரூ. 75.

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை வரலாறு எளிய நடையில் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது. கிரிக்கெட்டில் அவரது சாதனைகள், அவரது தனிப்பட்ட பண்புநலன்கள், அவரைப் பற்றி அவரது நலம்விரும்பிகள் கூறியவை ஆகியவையும் உண்டு. நன்றி: இந்தியா டுடே 21-11-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *