அயல் பசி
அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-7.html உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் பருத்தியூர் கே. சந்தானராமன். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.
—-
உள்ளத் திறப்பு, பெரணமல்லுர் சேகரன், விலை 100ரூ.
வடிகால் இல்லாமல் பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வடிகாலாக சிறுகதை வடிவத்தை எடுத்துக் கொண்டு, சமூகத்தின் போலிகளை அடையாளம் காட்டுகிறது இச்சிறுகதைகளின் தொகுப்பு நூல்.
நன்றி: தினத்தந்தி