அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ.
அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார அறிக்கைகள், ஆவேச சம்பவங்களையும் குறை கூறத்தவறவில்லை. நடுநிலையோடு கருத்துக்களை எடுத்து வைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 22/4/2015.
—-
குழந்தைகள் புத்தகங்கள், யுரேகா புக்ஸ், விலை 50ரூ, 60ரூ.
குழந்தைகள் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள வசதியாக, யானைகள் என்ற புத்தகம் வெளிவந்துள்ளது. யானை சிறு சிறு வாக்கியங்களில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. புத்தகம், ஆர்ட் காகிதத்தில் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது. விலை 50ரூ. குழந்தைகளுக்கான தமிழ் கதைப்புத்தகம் கரிசல் காட்டுச் செடி. இதுவும் படங்களுடன் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. விலை 60ரூ. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.