அவ்வையார் படைப்புக் களஞ்சியம்

அவ்வையார் படைப்புக் களஞ்சியம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 500ரூ.

தமிழ் இலக்கியத்தில், திருவள்ளுவரின் திருக்குறளுக்கு அடுத்தபடியாக சிறப்புக்கு உரியவை அவ்வையாரின் நீதி நூல்கள். ஆயினும், அவ்வையார் என்ற பெயருடன் பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் அவர்கள் பற்றியும், அவர்களுடைய படைப்புகள் பற்றியும் பல ஐயப்பாடுகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அவ்வையார் பற்றி விரிவான ஆய்வுகள் செய்து, 683 பக்கங்கள் கொண்ட இந்த பெருநூலை எழுதியுள்ளார், முனைவர் தாயம்மாள் அறவாணன். எட்டு அவ்வையார்கள் இருந்ததாக, இவர் தமது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார். சங்க கால அவ்வையாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுவைபட கூறுவதுடன், தமிழநாட்டில் உள்ள அவ்வையார் கோவில்கள் பற்றியும் தகவல் தெரிவித்துள்ளார். அவ்வையார் பற்றி இவ்வளவு பெரிய நூல் இதுவரை வந்ததில்லை. இதை ஒரு இலக்கிய களஞ்சியம் என்று கூறலாம். ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.  

—-

வாழ்வியல் சிந்தனைகள், முனைவர் சு. சக்திவேல், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.

புதுமையான சிந்தனைகளுடன கவிதாசன் படைப்புகளில் வாழ்வியல் சிந்தனைகள் அடங்கிய ஆய்வு நூல். ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 4/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *