ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர்
ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, விலை 300ரூ.
இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பது ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஆனால் அந்த வரலாற்றையே மர்ம நாவல்போல ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர். நாஜி என்ற பெயர், அதற்கான ஸ்வத்திக் சின்னம் ஆகியவை வந்தது எப்படி, அந்தக் கட்சி உருவான விதம் என்ன, இன்றைய அரசியல் பிரசார உத்திகளுக்கு ஹிட்லர் வழிகாட்டிய முறை, அவரது ஆளுமை, வக்கிர குணங்கள் என்று அனைத்தும் படித்து வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஜெர்மனியின் வரலாறு, இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டம், கோயபல்ஸ் போன்றவர்களைப் பற்றிய ருசிகர விவரங்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.
—-
வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?, வானதி பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்கும் ஆனந்தம்தான். அதிலும் வெளிநாட்டு சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் விழிப்புடன் இருப்பதற்கான அரிய பல தகவல்களை நூலாசிரியர் கே.பி. அருணா அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.