ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி
மங்களேஸ்வரியம், ஜோதிடர் அல்லூர் வெங்கட்ராமன், ஸ்ரீ ஆனந்த நிலையம், சென்னை – 600 083, பக்கம்: 676, விலை: ரூ. 360.
வராகமிஹிரர், வடமொழியில் எழுதிய பிரஹத் ஜாதகம் என்ற பிரபல நூலை, தமிழில் செய்யுளாக பாடிய புலவர்கள் இருவர். இலிங்கன் என்பவரும், வைத்திலிங்கம் என்ற ஜோதிடரும் தமிழில் மங்களேஸ்வரியம் என்னும் பெயரில், மொழி பெயர்த்தும் பாடியுள்ளனர். அதற்கு, விளக்க உரை தந்திருக்கிறார் நூலாசிரியர். ஓரளவு, ஜோதிட ஞானம் உள்ளவர்கள், எளிதில் இதைப் புரிந்து கொள்ளலாம். ஆங்காங்கு காணப்படும், அச்சுப் பிழைகள் கவனத்துடன், அடுத்த பதிப்பில் களைவது அவசியம். – சிவா.
—
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி, சி.என். குப்புசாமி முதலியார், முல்லை நிலையம், சென்னை – 600 017, விலை: ரூ. 100.
கதைக்குள் கதை, கருத்தைக் கவரும் விதத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் அனைவராலும் பேசப்பட்ட இக்கதை இப்போது வெளிவந்திருக்கிறது. அந்தக் காலத்தில் கதை சொல்லும் விதத்தை இது படம் பிடிக்கிறது.
—
சேது காப்பியம் (4) வளர்நெறிக் காண்டம், வா.மு. சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை – 600 092, விலை: ரூ. 400.
ஆசிரியர் கவிஞர், சமூக விஷயங்களை கவிதைகளில் எழுதியுள்ளார். இக்கவிதைகளில் ‘ஆபாச திரைப்படங்கள் கலங்கிய குட்டையாகும்’ என்று வர்ணிக்கிறார். நன்றி: தினமலர் (7.4.2013).