ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார்
ஆளுமைத் திறன் பாதை தெரியுது பார், தந்தி பதிப்பகம் ,சென்னை, விலை 160ரூ.
தினத்தந்தியில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் பெர்சனாலிட்டியை வளர்த்துக் கொள்வது எப்படி? என்ற தலைப்பில் நெல்லை கவிநேசன் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்தத் தொடர் வாசகர்களிடையே குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்போது ஆளுமைத்திறன்: பாதை தெரியுது பார் என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி? நல்ல மனப்பாங்கை உருவாக்குவது எப்படி? உணர்வுகளைக் கையாள்வது எப்படி? ஆகிய தலைப்புகள் அடங்கியுள்ளன. இளமைப் பருவத்திலேயே ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டவர்கள் மட்டுமே வாழ்க்கையில் சாதனைகளைப் புரிய முடியும். அதை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளை ஆசிரியர் எளிய நடையில் புரிய வைக்கிறார். ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள இந்த நூல் சிறந்த வழிகாட்டி. அறிவுபூர்வமான உணர்வுகளை வளர்க்க உதவும் கருத்துக் கருவூலம். வாழ்க்கையில் சாதனை புரிய எண்ணும் மாணவர்களுக்கு இது ஒரு கலங்கரை விளக்கம். நன்றி: தினத்தந்தி, 15/4/2015.
—-
காதல் அகராதி, எம்.ஏ. முகமது சுல்தான், பெமினாமாஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 250ரூ.
காதல் தொடர்பான விஷயங்களை உரையாடல் வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஆனால் ஆசிரியரின் சில கருத்துகள் விவாதத்துக்குரியவை. நன்றி: தினத்தந்தி, 15/4/2015.