இலக்கிய மாண்புகள்
இலக்கிய மாண்புகள், செம்மூதாய் பதிப்பகம், ஒவ்வொரு நூலும் விலை 60ரூ.
குறுந்தொகை காட்சிகள், சிற்றிலக்கியங்களில் வாழ்வியல், அனுமனின் வீரச்செயல்கள், பெரியு புராணத்தில் பக்தி, பாரதியின் பாஞ்சாலி போன்ற தலைப்புகளில் முனைவர் தா. நிலகண்ட பிள்ளை இந்த நூலில் இலக்கிய நயங்களை எழுத்தோவியங்களாக்கித் தருகிறார். இதேபோல அவர் எழுதிய சிலப்பதிகாரச் சிந்தனைகள், செம்மொழிச் சிந்தனைகள், செவ்விலக்கியப் பதிவுகள் ஆகிய நூல்களிலும் இலக்கிய மணம் வீசுகிறது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
வெற்றி உங்களுக்காக, கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
வெற்றியை விரும்பாதவர்கள் யார்? ஆனால் அந்த வெற்றித் தேவையை அடைவது எப்படி என்றுதான் அனேகம் பேருக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, வெற்றி உங்களுக்காக நூலைப் படைதுள்ளார் கவிஞர் கவிதாசன். சுருக்கமாகவும், சுவையாகவும் இவர் கொடுத்துள்ள குறிப்புகள், வெற்றி நோக்கி விரைய விரும்புவோருக்கு உதவும். நன்றி: தினத்தந்தி, 24/6/2015.