ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு

ஈழத்தமிழரின் போராட்ட வரலாறு, கண்மணி கிரியேட்டிங் வேல்ஸ், 4, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, தொகுதி 1, பக். 504, தொகுதி 2, பக். 464, இருதொகுதிகளும் சேர்த்து விலை ரூ. 700.

நல்ல நிலம் நாவலின் மூலமாக இலக்கிய உலகில் தடம் பதித்தவர் பாவை சந்திரன். இலங்கைத் தமிழரின் பிரச்னையை, தினமணி நாளிதழில் அவர் தொடராக எழுதினார். அது, இப்போது நூல் வடிவம் பெற்றள்ளது. மூத்த பத்திரிகையாளரான இவர், பல மனிதர்களை சந்தித்து, பல புத்தகங்களை படித்து, பல ஆவணங்களைத் தேடி தகவல்களை திரட்டி வருகிறார். கிடைத்தற்கரிய பல புகைப்படங்களையும் தேடிப்பிடித்திருக்கிறார். 40 பக்கங்களில் புகைப்படங்கள். புராதன இலங்கையில் தொடங்கி, ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான செய்திகள். ஈழத் தமிழர்களின் சோகக் கதையை இதய வலியுடன் எழுதியிருக்கிறார். இந்த கண்ணீர் கதையை 910 பக்கங்களில் நிணவாசம் வீச சொல்லிச் செல்கிறார். -எஸ். குரு.  

—-

 

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே, சோமு. பழ. கருப்பையா, அழகப்பர் பதிப்பகம், (பெரியார் சிலை பெட்ரோல் பங்க் பின்புறம்), காரைக்குடி 1.

பாரதி பாடல் வரியையே தலைப்பாக வைத்து தன் படைப்புகளை தொகுத்துள்ளார் சோது பழ. கருப்பையா. இவர் இளைஞர், நீலகிரி, சிங்காராவில், பைக்காரா நீர் மின் நிலையத்தில் பணிபுரிபவர். இயற்கை அழகு, விலங்குகள், பறவைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடுள்ள இந்த பொறியியல் வல்லுனருக்கு, இயற்கை சூழல் மாசுபடுவது மிகுந்த ஆதங்கம் அளிக்கிறது. அவை, இப்படைப்புகளிலும், பிரதிபலிக்கிறது. -அகிலா மணாளன். நன்றி: தினமலர், 11/3/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *