உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், ஜான் ரீடு, மலையாளம் யூமா. வாசுகி, தமிழில் ரா. கிருஷ்ணையா, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 250ரூ.

நவம்பர் புரட்சியின் சாட்சியங்கள்

ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாகவும், அதைப் பற்றி முழுமையானதொரு சித்திரத்தையும் தருகிறது ஜான் ரீடு எழுதிப் புகழ்பெற்ற இந்த நூல். இந்த நூலும் நூலின் தலைப்பும் காலம்காலமாக உச்சரிக்கப்படுவதாகவும் உத்வேகம் ஊட்டக் கூடியதாகவும் இருந்துவருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் – சோஷலிசவாதி ஜான் ரீடு, ரஷ்யாவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்கூட்டியே உணர்ந்து அந்நாட்டுக்குச் சென்று தங்கினார். அந்நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களடன் தொடர்பும் வைத்திருந்தார். ரஷ்ய மக்களின் எழுச்சியை நேரில் கண்டுணர்ந்த அவர், புரட்சி சார்ந்த நிகழ்வுகளை விவரித்து எழுதிய நூல்தான் ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ (Ten Days that shook the world).

நவம்பர் புரட்சியின் கடைசி 10 நாட்களில் நிகழ்ந்த முக்கிய திருப்பங்களை இந்த நூல் அரசியல் பார்வையுடன் பதிவு செய்கிறது. நூலை எழுதி முடித்த கொஞ்ச காலத்திலேயே ஜான் ரீடு இறந்துபோனதுதான் சோகம்.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் ரா. கிருஷ்ணையா. முன்னேற்றப் பதிப்பகத்தின் முதல் பதிப்பு 1980-ல் வெளியானது. பின்னர் என்.சி.பி.எச். நிறுவனத்தாலும், அலைகள் வெளியீட்டகத்தாலும் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. விலை 250ரூ.

நன்றி: தி இந்து, 5/11/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *