பேரரசன் அசோகன்
பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ.
‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல்.
அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவரது மனச் சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்துபோகிற அளவுக்குப் பயணப்பட்டிருக்கிறார்.
அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு நாம் வந்துவிட இயலாது.
மக்களின் மகிழ்ச்சி, அவர்களின் வாழ்க்கைத்தரம் என அவர் எப்போதும் கவனம் செலுத்தி வந்திருப்பது அழகு, சிறப்பு. வாசகனைச் சென்றடைய வேண்டிய முயற்சிகளை சார்லஸ் ஆலன் திறம்பட உழைத்து அமைத்திருக்கிறார்.
மொழியாக்கத்தில் தருமியின் செயல்பாடு மனதுக்கு நெருக்கமானது. முன்னோர்களை அறிய முயல்வது நம்மை அறிவது போன்றதே.
நன்றி: குங்குமம், 18/11/2016.