வீரம் விளைந்தது
வீரம் விளைந்தது, தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், கார்முகில், விலை 250ரூ.
ஒரே நாவல் மூலம் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் பலர் உண்டு. அப்படிப்பட்ட நாவல் ‘வீரம் விளைந்தது’. உலகெங்கும் உள்ள போராளிக் குழுக்களுக்குக் காலம்காலமாக உத்வேகம் அளித்துவரும் நாவல்களில் இதுவும் ஒன்று. ‘How the steel was Tempered’ என்று ஆங்கிலத்தில் வெளியான இந்த நாவல், ஒரு சுயசரிதை நாவல்.
இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை வீரர்களில் ஒருவராக ரஷ்ணப் புரட்சியில் பங்கேற்றுப் போரிட்ட நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி. இந்த நாவலில் வரும் பாவெல் கர்ச்சாக்கின் என்ற கதாபாத்திரம், அவருடைய சொந்தக் கதைகயை மையமாகக் கொண்டது. இந்த நாவல் மிகப் பெரிய தரிசனங்களைத் தரவில்லை என்ற சிலர் வாதிடலாம்.
ஆனால் ஒரு நாட்டின் மிகப் பெரிய புரட்சியில் பங்கேற்ற சாதாரண வீரனின் பார்வையிலிருந்து, பொதுவுடைமை மக்களாட்சியில் ஒரு நாடு எப்படி மீண்டெழுந்தது என்பதை யதார்த்த பாணியில் உணர்ச்சிபூர்வமாக இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது. இந்த நாவலை மொழிபெயர்த்தவர் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.).
இந்த நாவல் என்.சி.பி.எச்., தமிழினி, கார்முகில் என பல பதிப்புகளைக் கண்டிருக்கிறது. விலை 250ரூ.
நன்றி: தி இந்து, 5/11/2016.