என் ஆசிரியப் பிரான்
என் ஆசிரியப் பிரான், கி.வா. ஜகந்நாதன், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர், பக். 192, விலை 145ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-195-4.html தமிழ்த்தாத்தா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் அவர்கள் இல்லையேல், சங்க இலக்கியங்கள் பல நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். அந்தளவுக்கு அவர் கிராமம் கிராமமாகச் சென்று, அலைந்து திரிந்து, அந்த ஓலைச் சுவடிகளைச் சேகரித்து, அச்சடித்து வெளியிட்டார். அது தவிர, தனது ஆழ்ந்த தமிழ்ப் புலமையால் அப்பாடல்களுக்கு பொருளுரையும் இயற்றி அவற்றையும் நூல்களாக வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றினார். அத்தகையவரின் அருமை பெருமைகளையும், தமிழ்ச் சேவைகளையும் அவரது முதன்மை மாணவர்களாகிய இந்நூலாசிரியர் இதில் தொகுத்துள்ளார். உ.வே.சா. அவர்களே என் சரித்திரம் என்ற நூலுக்காக எழுதி வைத்திருந்த, சுவையான பல நிகழ்ச்சிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இதில் இலக்கியம் மற்றும் பல புலவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் அடக்கம். ஆங்கிலேயர் ஆட்சியின்போது இருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், காவடிச்சிந்து, திருப்புகழ் போன்றவற்றின் பல பாடல்கள் ஆபாசம் மிகுந்திருப்பதால் அவற்றை அழித்து விட வேண்டும் என்று தீர்மானித்த நிலையில், அவரை உ.வே.சா. அவர்கள் வீடு தேடிச் சென்று பார்த்து, தனது அறிவார்நத் விளக்கத்தால் அவரது எண்ணத்தை மாற்றி, மன்னிப்பு கேட் வைத்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர், தனக்கு மனமுவந்து அளித்த ஒரு கிராமத்தை ஏற்க மறுத்தது. இவரைப் பாராட்டி போப் ஆண்டவர் கடிதம் எழுதியது என்று இந்நூலிள்ள பல தகவல்கள் படிக்கச் சுவையாக இருப்பதோட உ.வே.சா. அவர்களின் உயர்வையும் எடுத்துரைக்கிறது. -பரக்கத். நன்றி: துக்ளக், 26/11/2014.