ஒன்றுக்கும் உதவாதவன்
ஒன்றுக்கும் உதவாதவன், அ. முத்துலிங்கம், உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-201-6.html
ஒரு சிறந்த எழுத்தாளன் எப்போதும் ஒரு மைதாஸ் அரசனைப் போலத்தான். மைதாஸ் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றால், ஒரு சிறந்த எழுத்தாளன் தொட்டதெல்லாம் வாழ்வாகவும் அனுபவமாகவும் கலையாகவும் மாறுகிறது. அப்படிப்பட்ட ஒரு கலைஞன்தான் அ. முத்துலிங்கம். நமது காலத்தில் இவ்வளவு துல்லியமான மொழியும் படைப்பின் ரஸவாதமும் கொண்ட இன்னொரு படைப்பாளியைக் காண்பது அரிது. தமிழில் ஒரு சர்வதேச எழுத்தாளனின் குரலையும் தொனியையும் கொண்டுவந்தவை முத்துலிங்கத்தின் படைப்புகள். ஒன்றுக்கும் உதவாதவன் தொகுப்பில் அத்தகைய பல கட்டுரைகள் இருக்கின்றன. வாழ்வின் மிகச் சிறிய நிகழ்வுகளின் வழியாக மிகப் பெரிய தரிசனங்களை இக்கட்டுரைகள் உருவாக்குகின்றன. சிலந்தி ஒன்று, ஒரு பூச்சியைப் பிடிப்பதுபோல அவ்வளவு சாகசத்துடன் அவை வாசகனைக் கவ்விப் பிடிக்கின்றன. வாழ்க்கையில் கதாபாத்திரங்கள் என்றோ, சம்பவங்கள் என்றோ, தனியாக எதுவும் இல்லை. எல்லாமே கதைகளாகும் ஒரு அற்புத கணத்திற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கின்றன என்பதை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் சொல்கின்றது. நன்றி: குங்குமம், 3 டிசம்பர் 2013.