கம்பனில் சட்டமும் நீதியும்
கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ.
To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html ராமாயணத்தில் சட்டம் கம்பன் கழகத்தின் பிரபல பேச்சாளரும், நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவருமான நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன் கடந்த முப்பது ஆண்டகளாக நீதித்துறையில் முழுமூச்சாகச் செயல்பட்டு வருகிறார். ராமாயணம் என்னும் கதைக் களத்தின் வெளியில் நின்று விமர்சிக்காமல் உள்ளே நின்று, இடம் சுட்டிப் பொருள் விளக்க முயன்றுள்ளார் நூலாசிரியர். முதல் கேள்வி சட்டம் என்னும் சொல் கம்பரின் காலத்திலும், காப்பியத்திலும் இருந்ததா என்றால், இல்லை. அறம், தருமம், நீதி, முறை, முறைமை, செங்கோல், மனுமுறை ஆகிய சொற்களைத்தான் கம்பர் பயன்படுத்தியுள்ளார். இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் சூழலைப் பொறுத்துப் புது விளக்கங்கள் தருகிறார் வெ. இராம சுப்பிரமணியன். கம்பனும், கருப்பு அங்கியும் (Black Robe) என்னும் கட்டுரையோடு தொடங்கும் இந்நூலில் கொண்டாட்டக் காலங்களில் வரிவிலக்கும், தண்டனைக் குறைப்பும், புலன் விசாரணை, உடல் ஊனமுற்றோர்க்கான உரிமைகள் உள்ளிட்ட 22 பகுதிகள் உள்ளன. இந்தியாவில் நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் கறுப்பு நிறத்தில் அணியும் அங்கி விவாதப் பொருளாக மாறிய ஒரு விஷயம். ஆங்கிலேயர்களின் எச்சமாகவே அது விமர்சிக்கப்படுகிறது. ஆனால் கம்பரோ ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, நீதி தேவனாகக் கருதப்படும் எமனுடைய நிறம் கருமை என்கிறார். பால காண்டத்திலும், யுத்த காண்டத்திலும் கம்பர் நீதிக்குக் கருப்பு அங்கியை அணிவித்திருப்பதைச் சுவைபடக் காட்டியிருக்கிறார். சமகாலத்தோடு பொருந்திப் போகும் பல விஷயங்களைத் தேடி, அடையாளங்கண்டு, எளிமையான நடையில் விளக்குகிறது இந்நூல். -சுசி.ம. நன்றி: தமிழ் இந்து, 6/9/2014.