கலாம் காலம்
கலாம் காலம், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் ரோடு, சென்னை 14, பக். 128, விலை 80ரூ.
நல்ல புத்தகங்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல மனிதர்கள் துணையோடு எவ்வளவு அறிவைப் பெற முடியுமோ அவ்வளவு அறிவை சேகரியுங்கள், கடுமையாக உழையுங்கள், விடா முயற்சியுடன் பிரச்னைகளை தோற்கடித்து வெற்றி பெறுங்கள் என்றெல்லாம் நம் நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் அப்துல் கலாம், இளைஞர்களின் கனவு நாயகராக மாறிவிட்டவர். அப்துல் கலாமின் எழுச்சி மிக்க வரலாற்றைச் சொல்லும் உணர்ச்சிக்காவியம். -எஸ்.குரு.
—-
நமக்குத் தொழில் கவிதை, இரா. அரங்கநாதன், புதுக்குயில் பதிப்பகம், 26, காவேரி வீதி, வள்ளலார் நகர், நயினார் மண்டபம், புதுச்சேரி 5, பக்.144, விலை 100ரூ.
இந்நூலாசிரியர் கவியரங்கங்களில் வானொலி, தொலைக்காட்சிகளில் கவிதை வழங்கி புகழ்பெற்றவர். இந்நூல் புதுவை அரசு கலை பண்பாட்டுத்துறையின் மான்ய உதவித்தொகை பெறப்பட்டு வெளியாகியுள்ளது என்பதே இந்நூலின் சிறப்பாகக் கூறலாம். நான் கற்றதை, கேட்டதை, கருதுவதை, கவிதை பண்ணியிருக்கிறேன். மக்களிடமிருந்து மக்களுக்காக என்று கவிதை பற்றிய சுய அறிமுகம் இன்னும் சிறப்பு. கவிதை பிரியர்களுக்கு ஒரு சுவையான பயனுள்ள விருந்து, -எஸ். திருமலை. நன்றி: தினமலர் 18/12/2011.