குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி
குழந்தைகளின் பிரச்சினைகளை உளரீதியாக தீர்ப்பது எப்படி?, ஜான் முருகசெல்வம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, விலை 25ரூ.
குழந்தை வளர்ப்பில் இன்றைய இளம் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். அந்தக் காலம்போல, இவ்விஷயத்தில் வழிகாட்டுவதற்கு இன்று தாத்தா பாட்டிகள் இல்லை. இந்நிலையில் குழந்தை வளர்ப்பில் சந்திக்க வேண்டியிருக்கும் முக்கியமான பிரச்சினைகளை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை தெளிவாக வழங்கியிருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி.
—-
நினைத்ததை நிறைவேற்றும் காரிய சித்தி மந்திரங்கள், ஸ்ரீராம் ஸ்வாமிகள் எடையூர் சிவமதி, அழகு பதிப்பகம், சென்னை, விலை 45ரூ.
இறைவனை நினைத்து அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சித்தர்கள் பல அரிய மந்திரங்களை விட்டுச் சென்றுள்ளனர். அத்தகைய மகிழ்ச்சி தரும் மந்திரங்களின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். நன்றி: தினத்தந்தி.
—-
ஜென்னல், சத்குரு, எழுத்தாக்கம் சுபா, தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 125ரூ.
நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கிய ஜென் கதைகளை மையமாக வைத்து தொகுக்கப்பட்ட நூல் ஜென்னல். ஒவ்வொரு கதைக்கும் சத்குருவின் அற்புத விளக்கங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு சிறப்பாகும். குறிப்பாக வாழ்க்கைக்கு அடிப்படையானது எதுவாக இருந்தாலும், அதை நாமே செய்தால்தான் நமக்குப் பலன் கிடைக்கும். மென்மையான இதயமும், கூர்மையான புத்தியும், தெளிவான விழிப்புணர்வும் அனைவருக்கும் தேவை என்பவை போன்ற வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி.