குழந்தைகளின் மனநலம்

குழந்தைகளின் மனநலம், ஏ.வினோத்குமார்,கண்ணதாசன் பதிப்பகம், பக்.245, விலை ரூ.160.

கரு உருவானது தொடங்கி அவற்றில் ஏற்படும் மனவளர்ச்சி, குழந்தைகளிடம் காணப்படும் பொதுவான பயம், இடதுகைப் பழக்கம், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பது போன்றவை, குழந்தைகளின் படிப்பு தொடர்பான உளவியல் என 3 பகுதிகளாக இந்தப் புத்தகம் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன் பிறந்த பின்பு தன் முழு வாழ்நாளில் உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உயிரியல் மாற்றங்களைக் கடக்கிறானோ, அதைவிட அதிகமான உயிரியல் மாற்றங்களை அவன் கருவறையில் இருக்கும் 10 மாதங்களில் கடக்கிறான். எனவே ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாள் என்பதை அறிந்த உடனேயே கருவிலுள்ள குழந்தையின் மூளையின் சீரான வளர்ச்சிக்குத் தேவையானவற்றை உணர்ந்து நடக்க வேண்டும் என்கிறார் புத்தகத்தின் ஆசிரியரும் உளவியலாளருமான ஏ.வினோத்குமார்.

ஒரு குழந்தை பிறந்த பின் வளரும் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் மனநலம் சார்ந்த வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகள் இந்தப் புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தைக்கும் வேறுபடும் செயல்பாடுகள், அவர்களைக் கையாள்வது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு குழந்தைக்கு இடது கைப் பழக்கம் இருந்தால், கட்டாயப்படுத்தி அதனை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்கிறார் ஆசிரியர்.

கருத்தரித்த தாய்மார்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நன்றி: தினமணி, 8/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *