சிவமூர்த்திகள் 64
சிவமூர்த்திகள் 64, தெள்ளாறு M. மணி, சங்கர் பதிப்பகம் வெளியீடு, பக். 408, விலை 250ரூ.
சைவம், சாக்தம் ஆகிய இரு சித்தாந்தகளிலும் பரம்பொருளை நிராகார ரூபமற்ற நிலை, அருவுருவ நிலை, ரூபமுள்ள நிலை – என்ற மூன்ற நைலகளிலும் தியானிப்பதாக ஹிந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் லிங்க வடிவ வழிபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ரூபமற்ற அருவுருவமாக பரம்பொருள் இருந்தாலும், உருவ அம்சத்தில் சிவலிங்கம் இருப்பதால், அதனையே மூலமாக வைத்து 64 வடிவங்களில் மூர்த்திகள் உருவானதாக ‘சிவபராக்கிரம்’ என்கிற வடமொழி நூல் கூறுகிறது. மூர்த்திகள் அனைத்தும், ஆணவம் காரணமாக ஏற்படும் அதர்மங்களை அழித்து சத்தியத்தை நிலைநிறுத்தும் ஆற்றல் பெற்றவை என்பதால், இந்த வழிபாடு ஹிந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. இந்நூலில் சிவனின் 64 மூர்த்திகளைப் பற்றிய விளக்கங்களும், அவை தோன்றக் காரணமாக இருந்த புராண சம்பவங்களும், இந்த வழிபாடுகளால் கிடைக்கும் பலன்களும் விளக்கப்பட்டுள்ளன. தவிர, எந்த கோயிலில் எந்த மூர்த்தி ப்ரதிஷ்டை செய்யப்பட்டு, என்ன வழிபாடு நடத்தப்படுகிறது, அந்த மூர்த்தியின் உருவ அமைப்பை விளக்கும் வரைபடம் உள்பட அனைத்து சிவ மர்த்திகளின் பராக்கிரமங்களையும் தற்காலச் சூழலுக்கு ஏற்ப சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் தனித் தனியே விளக்கப்பட்டுள்ளது. இந்நூல் சைவ சமய பக்தர்களுக்குப் பெரிதும் பயன்தரத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 10/2/2016.