சொற்றுணை வேதியர்

சொற்றுணை வேதியர், பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும், புலவர் தி.வே. விஜயலட்சுமி, மணிவாசகர் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-235-3.html நற்றிணையைப் பதிப்பித்த ஆசான் பேராசிரியர் எச். வேங்கடராமன் வாழ்வும் தமிழ்த் தொண்டும் என்ற பெயரில் மணிவாசகர் பதிப்பகத்தில் வெளியாகியுள்ள 256 பக்க நினைவு மலரின் பின்னணியில் அவருடைய அன்பு மகள் தி.வே. விஜயலட்சுமியின் முயற்சியும் ஆர்வமும் ஈடுபாடும் ஒருங்கே தெரிகின்றன. தன் தந்தை என்ற பாசத்தில் அவர் செய்திருந்தாலும் நற்றிணையைப் பதிப்பித்து வெளியிட்ட நல்லாசனுக்குத் தமிழகமே செய்திருக்க வேண்டிய கடமை. இதை இந்த நூலுக்கு வாழ்த்தியும் அணிந்துரை செய்தும் ஆக்கங்களைத் தந்தும் உதவியுள்ள தமிழறிஞர்கள் கூட்டமே உணர்த்துகிறது. காவிரியும் கர்நாடக சங்கீதமும் போட்டிப்போட்டு பாய்ந்த திருவையாற்றிலே பிறந்து தமிழிலே தோய்ந்து அதிலேயே ஆழ்ந்த அறிஞரைப் பற்றிக் கடமையுணர்ச்சி மிக்கவர், புகழ் மணப்பவர். உளம்கவர் ஆசான், இறவாப் புகழ் பெற்ற ஆசான், சொல் வன்மை மிக்கவர், புலவர்களை உருவாக்கிய அரும்புலவர், காவிரிச் சூரியன் என்றெல்லாம் பாராட்டியுள்ளனர். தமிழ் படித்தால் நம்மவர்க்கு எதிர்காலமில்லை என்று எத்தனை ஆண்டுகளாய் இந்த மண்ணில் பேசி வருகிறார்கள். இதே நிலையில் ஐயா இழந்தோமே உம் போன்ற தமிழ்த் தொண்டர்களை என வருத்தமுறவே நேர்கிறது. இவ்வளவு பெரிய புலவர் கூட்டம் அவரிடம் பயின்றும் பணியாற்றியும் பழகியும் பாராட்டிச் சொல்லும் வார்த்தைகளைவிட மதிப்புரையில் கூடுதலாய்ச் சொல்லவும் கூடுமோ? வேங்கட ராமன் போன்ற பேராசிரியர்கள் நூற்றுக்கணக்கில் நமக்கு இப்போது தேவை. -ரங்காச்சாரி. நன்றி: தமிழ் இந்து, 28/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *