ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே, சித்ராலயா கோபு, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-6.html சித்ராலயா கோபுவும் டைரக்டர் ஸ்ரீதரும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தவர்கள். பழகியவர்கள், அந்த எழுபது வருட நட்பை, திரை உலகில் ஸ்ரீதர் உடனான அனுபவத்தை உள்ளது உள்ளபடி கோபு எழுதியிருக்கும் நூல். ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் அவரை எப்படி இயக்குநராக உருமாற்றியது என்பது உள்ளிட்ட பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார். நகைச்சுவை எழுத்தாளர்கள் அருகி வரும் இக்காலத்தில் கோபுவின் இந்த ஞாபகம் வருதே நூல் ஒரு வரப்பிரசாதம். நன்றி:குமுதம், 26/3/2014.
—-
அபூர்வ ராமாயணம் (தொகுதி 1)காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 57பி, பத்மாவது நகர், காமராஜ் சாலை, விருகம்பாக்கம், சென்னை 92, பக். 256, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html ராமாயணம் என்பது வெறும் இதிகாசம் மட்டுமல்ல, அது நம் பாரத தேசத்தின் அறநெறியை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கும் பெரும் பொக்கிஷம். அத்தகைய ராமாயணத்தை விமர்சனப்பூர்வமாக அணுகாமல் என்றும் நிலைபேறுடைய அறநெறிகளை மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் எழுச்சியுறச் செய்யும் மிகச் சிறந்த பணியை இந்நூல் வழி செய்திருக்கிறார் ஆசிரியர். வால்மீகி, கம்பன், துளசி போன்றோரின் ராமாயணமும் தியாகராஜர் கீர்த்தனை உள்ளிட்டவற்றில் பொதிந்து கிடக்கும் பல அரிய ராமாயணச் செய்திகளையும் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட ராமாயணக் கதைகள் இவை. கதைகள் தோறும் ராமனின் தரிசனம் நம்மை பரவசப்படுத்துகிறது. நன்றி:குமுதம், 26/3/2014