தாய்
தாய், தொ.மு.சி.ரகுநாதன், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ.
உலகெங்கும் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்களால் அமரத்துவம் மிக்க புரட்சிகரமான நாவலாக அங்கீகரிக்கப்பட்ட நாவல், மார்சிம்கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலாகும்.
ஒரு புரட்சித்தாயின் வேட்டைத் தவமாக, என்றென்றும் அழியாத காவியமாக கார்க்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். இன்று வரை தொழிலாளி வர்க்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வீரத்தை ஊட்டி வரும் ஓர் உலக இலக்கியம் என்றே இந்த நாவலைக்கூறலாம்.
இந்த நாவல் உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. நாவலை தமிழில் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், அழகிய முறையில் மொழிபெயர்த்துள்ளார். இந்த சுவை மிகுந்த நாவல், புதிய கட்டமைப்புடன் வெளியாகியுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 08/11/2017