திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும்
திருக்கோயில் அமைப்பும் ஆலய வழிபாட்டு முறைகளும், ஆர்.பி.வி.எஸ். மணின், வர்ஷன் பிரசுரம், பக். 160, விலை 100ரூ.
விச்வ ஹிந்து பரிஷத் முன்னாள் மாநிலத் தலைவரான இந்நூலாசிரியர், ஹிந்து சமயம் மற்றும் அதன் தத்துவங்களைக் குறித்துப் பல நூல்கள் எழுதியுள்ளார். அந்த வகையில், இந்நூலில் ஆலய வழிபாட்டின் அவசியம், ஆலய வடிவமைப்பின் தத்துவம், உத்ஸவங்களால் ஏற்படும் பலன்கள், விக்ரஹ ஆராதனை செய்வதன் தாத்பர்யம், விஷ்ணு கோயில்களில் வழிபாடு செய்யும் முறை, கும்பாபிஷேகம் செய்வதன் உள்ளார்ந்த பொருள், ஆலயங்களில் வழிபடுபடுபவர்கள் செய்யத் தக்கது, செய்யத் தகாதது… போன்ற பல விஷயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.தவிர, பெரும்பாலும் விக்ரஹங்களைக் கல்லில் வடிப்பது ஏன்? இந்தக் கல்விக்ரஹங்கள் எப்படி கடவுளாகும்? வேத காலத்தில் ஆலயங்களோ, ஆலய வழிபாடுகளோ இல்லை என்பது சரியான என்பன போன்ற பல்வேறு சந்தேகளுக்கான விளக்கங்களையும் இந்நூலில் ஆசிரியர் எளிமையாகக் கூறியுள்ளார். மேலும் ‘நெருப்பில் பூத்த நெருஞ்சி மலர்’ என்று பாண்டவர்களின் பத்தியான திரௌபதியின் மகத்துவங்களை விளக்கம் நூலும், கலியுகத்தில் கை கொடுக்கும் கடவுள் திருநாமம்’ என்ற விஷ்ணுவின் தாத்பர்யங்களை விளக்கும் நூலும், ‘தீண்டாமைக்குத் தீர்வுதான் என்ன?’ என்று ஆதிக்க ஜாதியிடமிருந்து தாழ்த்தப்பட்ட மகக்ளை விடுவிக்கும் வழிமுறைகளைக் கூறும் நூலும் ஆசிரியரின் கைவண்ணத்தில் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. -பரக்கத். நன்றி: துக்ளக், 24/2.2016.