நபி வழி அறிவோமா

நபி வழி அறிவோமா, வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா, சென்னை, விலை 280ரூ.

மனித சமுதாயம் நேர் வழி பெற்று அதன் மூலம் இவ்வுலக – மறு உலக வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குவது இறை வேதமாகிய திருக்குர்ஆனும், அதன் விளக்கமாக வாழ்ந்த இறைத் தூதர் நபிகள் நாயம் (லஸ்) அவர்களின் போதனையும் அகும். அதன் அடிப்படையில் இறைமறை மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளின் அடிப்படையில் இந்த நூலை வழக்கறிஞர் வசந்தகுமாரி செல்லையா எழுதியுள்ளார். அழகிய முன் மாதிரியாகத் திகழ்ந்த அண்ணலாரின் வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகுற எடுத்துக் கூறுகிறார். பாராட்டத்தக்க முயற்சி. நன்றி: தினத்தந்தி.  

—-

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், சென்னை, விலை 200ரூ.

சாதாரண குடும்பத்தில் பிறந்து மாமனிதராக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவர் மறைந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலும், இன்னும் பலருடைய இதயத்திலும் எம்.ஜி.ஆர். என்ற வார்த்தை மட்டும் இருப்பதை காணமுடிகிறது. எம்.ஜி.ஆரைப்பற்றி எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் இந்த புத்தகம் அனைவருடைய மனதையும் தொடும்வகையில் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *