நாடும் நலமும்
நாடும் நலமும், ஏ.எஸ். மாணிக்கம் அறக்கட்டளை, விலை 50ரூ.
600சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள சிறிய தீவு சிங்கப்பூர். குட்டித் தீவான சிங்கப்பூரின் விடுதலைக்கும், பின்னர் அதன் வளர்ச்சிக்கும், அந்த நாட்டு மக்களுக்கும், உலகத் தலைவர்களுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் லீ குவான் யூ. சிங்கப்பூரை வளம் மிகுந்த நலம் நிறைந்த நாடாக மாற்றிய பெருமை அந்த நாட்டின் தேசத்தந்தை என்று போற்றப்பட்ட லீ குவான் யூவையே சாரும். அந்த மாபெரும் மனிதரின் வாழ்க்கையையும், சிங்கப்பூரின் வளர்ச்சியையும் இந்த நூலில் ஆசிரியர் அனகை மாணிக்க ஆறுமுகம் அழகாக எடுத்துக்கூறுகிறார். பின்னிணைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இணைக்கப்பட்ட லீயின் சிந்தனைகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
நோய் தீர்க்கும் முத்திரைகள், ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகப்பயிற்சி மையம், விலை 100ரூ.
யோகாசனம்ண செய்யும்போது விரல்களை மடக்கி முத்திரைகளை செய்தால், சில நோய்களைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறார் நூலாசிரியர் யோக சிகிச்சை நிபுணர் பி.கிருஷ்ணன் பாலாஜி. படங்களோடு கூடிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.