நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும்
நியூட்ரினோ நோக்குக்கூடம் அச்சங்களும் அறிவியலும், விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், வெளியீடு தமிழ் நாடு அறிவியல் இயக்கம், சென்னை, விலை 90ரூ.
தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசாங்கம் ரூ.1500 கோடி ஒதுக்கியுள்ளது என்ற செய்தி வந்தவுடனே அதை வரவேற்றும், இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது பாதிக்கும், மக்களுக்கு ஆபத்துக்களை ளவிளைவிக்கும் என்ற எதிர்ப்பு கருத்துக்களும் உருவாயின. ஆனால் இந்த ஆய்வுக்கூடத்தால் எந்த ஆபத்தோ, அச்சமோ இல்லை. உலகளவில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் ஆய்வுக்கூடமாக இருக்கும் என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த நூலாசிரியரான விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன், நியூட்ரினோ என்றால் என்ன? தேனியில் அமைக்கப்பட இருக்கும் ஆய்வுக்கூடத்தில் எந்தெந்த வகையான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்? இந்த ஆராய்ச்சியினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பது போன்ற பல விவரங்களை எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வகையில் 112 பக்கங்களில் எழுதி இருக்கிறார். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் நியூட்ரினோவை பற்றிய தெளிவான முழு விளக்கத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய ஒரு நல்ல அறிவியல் நூல் இது. நன்றி: தினத்தந்தி, 24/6/2015