நூறு வயது வாழவேண்டுமா?
நூறு வயது வாழவேண்டுமா?, திரிசக்தி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 70ரூ.
புரியாதவர்களுக்கு புதிராகத் தெரியும் சித்தர்கள், புரிந்தவர்களுக்கோ புதையலாகத் தெரிபவர்கள். மனித சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய அக்கறை கொஞ்ச நஞ்சமல்ல. எது வாழ்க்கை என்பதையும், அதை எப்படி முறைப்படி வாழவேண்டும் என்பதையும் வகுத்துக் காட்டிய சித்தர்களின் வாழ்வியல் ரகசியங்களை தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் சைதை முரளி. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
எனை வெறுப்பவன் எனக்களித்த பரிசு, தமிழ்பிரியன்(எ) பெ.வை.மணிகண்டன், அறம் பதிப்பகம், புதுச்சேரி, விலை 65ரூ.
காதலிக்கு காதல் வருவதற்காக சற்று வித்தியாசமாக கண்ணிரைக் கவிதையாக்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
குர்ஆன் கூறுவதென்ன?, யுனிவர்ஸல் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ.
திருக்குர்ஆனின் தத்துவப் போதனைகள் அனைத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இஸ்லாமிய அறிஞர் மஹதி எழுதிய நூல். திருக்குர்ஆன் கூறும் கருத்துக்கள், ஆதாரப்பூர்வமான செய்திகள், நவீன விஞ்ஞானம் பற்றி இஸ்லாம் விளக்கும் தெளிவுரைகள் பற்றி எளிய நடையில் அழகுபட விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.