பறவைகளும் சிறகுகளும்

பறவைகளும் சிறகுகளும், பாஸ்கர் சக்தி, கயன் கவின் புக்ஸ்,16/25, 2வது கடல் போக்குச் சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை 41, பக். 152, விலை 110ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-865-9.html

வெள்ளையம்மாள் துவங்கி தவமணி முடிய 10 பெண்களின் சாயல்கள் நூலாசிரியரை பாதித்த பெண்களை மையமாக வைத்து, அவள் விகடனில்வெளியான கதைகள், பறவைகள் என்னும் தலைப்பிலும் கனவு நெடுஞ்சாலை, துவங்கி ஈவதுவிலகேல் முடிய 10 கட்டுரைகள் தீம்தரிகிட இதழில் வெளிவந்தவையும் இதில் இடம் பெற்றுள்ளன. சராசரி மனிதர்கள் சந்திக்கும் பாத்திரங்கள், ஏற்படும் அனுபவங்கள் இவற்றை எழுத்து நடையில், சற்று இலக்கியம் கலந்து இத்தொகுப்பை உருவாக்கியுள்ளார். கதையம்சம் என்று பெரிதாக ஏதுமில்லை எனினும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. -பின்னலூரான்.  

—-

 

கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், பக். 568+16, விலை 370ரூ.

சமூக நாவல்களில் சாதனை படைத்த பாலகுமாரன், வரலாற்று நாவல் எழுதுவதிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். சோழர் குல வரலாற்றில் தஞ்சைப் பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலும் கலைநயம் மிக்க ஆன்மிக மையங்கள் என்பதுடன் எழுத்தாளர்களின் எழுத்துப் பசிக்குத் தீனி போடும் களஞ்சியங்களாகும்- பாலகுமாரனின் கை வண்ணத்தில், ராஜேந்திர சோழனின் வரலாறும், சோழ வள நாட்டின் பெருமையும், கலை இலக்கியத்தின் செழுமையும், இந்த வரலாற்றுப் புதினத்தில் அவருக்கே உரிய அழகிய தமிழ்நடையில் பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சரித்திர நவீனம். -ஜனகன். நன்றி: தினமலர், 18/8/2013 பறவைகளும் சிறகுகளும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *