சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5
சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ-
உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்திகளை திரட்டித் தொகுத்து, நாம் வாழும் சமகால மக்கள் முன்னிலையில் படைப்பது, கலைக்களஞ்சியத்தின் குறிக்கோள் எனலாம். 486 திருமுறைத் தலக்ஙள் கொண்ட நான்காம் தொகுதியை காட்டிலும் 4, 102 தலங்கள் கொண்ட பிற்காலத் தலங்கள் என்ற இந்த ஐந்தாம் தொகுதிக்கு தரவுகள் சேகரிப்பது மிக மிகக் கடினம். க்ஷனென்றால் இதற்கு காலம், நாடு, தெய்வம், மூல நூல், தல வரலாறு முதலிய எந்த எல்லையும் கிடையாது. இருப்பினும், இக்குழு அரிது முயன்று இத்திருத்தலங்களைப் பற்றிய நம்பகமான செய்திகளை சேகரித்துத் தொகுதி வழங்கியுள்ளமை பதிப்பாசிரியரின் எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டும் என்ற மனத் தின்மையை காட்டுகிறது. தெரிந்த கோவில்களை பற்றிய தெரியாத செய்திகள் நிறையவே இடம் பெற்றுள்ளன. ஆண்டு முழுதும் பூத்துக் காய்க்கும் மாமரத்தை தல விருட்சமாக கொண்ட தலம் எது? திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கும், இலங்கை வீபிஷணனுக்கும் என்ன தொடர்பு? விநாயகர், முருகன், சனீஸ்வரன் வழிபாட்டுத் தலங்களாக நாளடைவில் மாறிப் போன சிவன் கோவில்கள் யாவை? இவ்வினாக்களுக்கான விடைகளை நூலில் காணலாம்- நமக்குத் தெரிந்த னநவக்கிரகத் தலங்கள் ஒன்பதுதான், ஆனால் ஒவ்வொரு நவகிரகத்திற்கும் பல ஆகி வந்த தலங்கள் உள்ளனவாம். உதாரணத்திற்கு திருவாதவூர், ஆமாம், அருளாளர் மணிவாசகர் பிறந்த தலம். அத்துடன் சனி பகவானின் முடவாதத்தை நீக்கிய தலம்.அதனால்தான் வாதவூர் என்ற பெயர் வந்ததாம். -ராமநாதன் பழனியப்பன். நன்றி: தினமலர், 1/9/2013.
—-
இலக்கியமும் இலக்கிய ரசனையும், ஜனகன், கங்கை புத்தக நிலையம், பக். 208, விலை 80ரூ.
வாசிப்பதையே சுவாசமாக கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தில் தற்போது வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது. இன்றைய தமிழ் சமுதாயம், வாசிப்பிற்கு குறிப்பாக தமிழ் இலக்கிய வாசிப்பிறகு நேரம் ஒதுக் கவேண்டும் என்றும் தமிழ் வாசகர்களின் வாசிப்பு தளம், விரிவடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதியுள்ளார். நூலாசிரியர் இந்த நூலில் உலகம் முழுவதும் உள்ள பல எழுத்துலக சாதனைகள், சாதனையாளர்களை பற்றிய தகவல்கள், வாசகர்களின் இலக்கிய தாக்கத்தை தணிக்கும் என்றே கூறலாம். -சஞ்சூ நன்றி: தினமலர், 1/9/2013.