பாரதி வசந்தனின் சங்கு புஷ்பங்கள்

பாரதி வசந்தனின் சங்கு புஷ்பங்கள், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை 135ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-6.html

புதுவை தந்த சிறந்த எழுத்தாளரான பாரதி வசந்தனின் சிறுகதைத் தொகுதி சங்கு புஷ்பங்கள். இதில் 20 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒருவிதம். சமுதாய அவலங்கள், அரசியல் அநீதிகள், ஏழை பணக்காரன் வேறுபாடு இப்படி பல்வேறு பிரச்சினைகளையும் அலசி இருக்கிறார். தலைப்புக் கதையான சங்கு புஷ்பங்கள் உணர்ச்சிமயமானது. இளைய தலைமுறையினர் இக்கதைகளைப் படித்தால், சிந்தனையைத் தூண்டும் இளம் எழுத்தாளர்கள் படித்தால், சிறந்த சிறுகதைகளைப் படைக்கக்கூடிய உத்திகளை அறிந்துகொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 12/3/2014.  

—-

தமிழ் இலக்கிய வரலாறு, சி. பாலசுப்ரமணியன், செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 280, விலை 99ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-175-0.html

செம்மொழியாம் தமிழின் பழம் சிறப்பை அறிவியல் பூர்வமாக உலகுக்கு விளக்குவது அவசியம். அந்தப் பணியை வரலாற்று ஆய்வாளர்களை விட, தமிழறிஞர்கள் பலரும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதற்கு இதுபோன்ற நூல்களே சான்று. பழங்காலம் முதல் இன்றுவரை உள்ள தமிழ் இலக்கியங்களின் வழியாக தமிழின் சிறப்பை விளக்கியிருப்பது சிறப்பு. தமிழின் தோற்றம், வளர்ச்சியை இன்றைய நாள் வரை அறிய உதவும் அற்புதப் பெட்டகமாக இந்நூல் அமைந்துள்ளது. அந்தந்தக் காலகட்டங்களில் தோன்றிய இலக்கியங்களையும், அவற்றின் விளக்கங்களையும் மட்டுமே சுட்டியிருப்பதாக டாக்டர் மு. வரதராசனார் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த சமூக, அரசியல், பொருளியல் சூழல்களுக்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துவந்த விதத்தை நூலாசிரியர் விளக்கியிருப்பதைக் காண முடிகிறது. நூலின் பிற்சேர்க்கையான இந்திய விடுதலை இயக்கமும் தமிழ்நாட்டில் அதன் செல்வாக்கும் கட்டுரை தமிழ் இலக்கிய வரலாற்றை இலக்கியத்துக்கு அப்பாலும் விரித்துச் செல்கிறது. கடந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தமிழ், நாவல் வரை இந்நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது முழுமையான தமிழ் இலக்கிய வரலாறாக இந்நூலை உயர்த்துகிறது. நன்றி: தினமணி, 24/2/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *