புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)
புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2), டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ.
அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில், ‘மணற்குள’ என்பது, மணக்குள விநாயகர் என்று மாறிவிட்டது. புதுச்சேரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் விநாயகர் கோவில்கள் ஒன்பது, முருகன் கோவில்கள் ஐந்து, சிவன் கோவில்கள் 15, பெருமாள் கோவில்கள் ஆறு, அய்யனார் கோவில்கள் நான்கு, அம்மன் கோவில்கள் 15, காளி கோவில்கள் ஐந்து, காமன் கோவில்கள் பற்றிய தகவல்கள், அந்த கோவில்களின் இலக்கியங்களை, தலபுரான வரலாறுகளை பெருமுயற்சி செய்து திரட்டி, பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 24/1/2016.