மனங்கொத்தி
மனங்கொத்தி, புலவர் மு. அருளப்பன், அனலகம் வெளியீடு, விலை 60ரூ.
நல்லொழுக்கம், நன்னெறி போன்ற சமூக சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட 21 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் இது. நம்மைச்சுற்றி அன்றாடம் அரங்கேறும் நிகழ்வுகளை கண்முன்னே காணும் வகையில், கதைகள் அனைத்தும் எழுதப்பட்டு உள்ளன. ‘விவாகரத்து’, ‘ஊனம்’, ‘சிறைக்குள் வரவேண்டியவன்’ என நூலில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் கருத்தையும், கவனத்தையும் ஈர்க்கின்றன. படிப்போரின் சிந்தையை கவரும் நோக்கில் பேச்சுவழக்கில் கதைகள், எழுதப்பட்டிருப்பது சிறப்பு. இது ஒரு சிறுகதை தொகுப்பு என்பதை விட, வாழ்க்கை பாடங்களை விதைக்கும் நல்லெண்ண நூல் என கூறுவதே பொருத்தமானது, அனைத்து தரப்பினரும் படிக்க வேண்டிய சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.
—-
அம்மாவின் கையும் பேசும், ஏ. செந்தமிழ்ச் சீனிவாசன், குட்புக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ.
வீரியமுள்ள விதைகளை கவிதை வரிகளாக மாற்றி நூலாசிரியர் எளிமையான முறையில் எழுதி அனைவருக்கும் பயனுள்ள வகையிலும், சிந்திக்கும் வகையில் நூலில் எடுத்து கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.