மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ.

காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி. ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் காந்திஜியின் முதல் கூட்டம், முதன்முதலில் மகாத்மா என அழைக்கப்பட்ட நிகழ்வு, விடுதலைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்னரே தாழ்த்தப்பட்டவர்களுடன் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்து அதில் வெற்றி கண்ட காந்திஜியின் தீண்டாமை எதிர்ப்புச் சிந்தனை, காந்தியின் தமிழ்நாட்டுப் பயண விவரங்கள், உலகெங்கும் வெளிவந்திருக்கும் அவரது தபால் தலைகளைப் பற்றிய தகவல்கள், பல மொழிகளைப் பயன்படுத்திய அவரது கையெழுத்து மாதிரிகள் ஆகியவை நூலுக்கு மாலையாக அமைந்துள்ளன. தினமணியில் பல சமயங்களில் வெளியான காந்தியடிகள் பற்றிய தகவல்களையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமணி, 30/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *