மாநகர் மதுரை – அன்றும் இன்றும்

மாநகர் மதுரை – அன்றும் இன்றும், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், வில்லிவாக்கம், சென்னை 49, பக்கங்கள் 28, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-482-6.html

சங்கம் வைத்து தமிழை வளர்த்த ஆலவாய் என்றழைக்கப்படும், மதுரை மாநகர் பற்றிய நூல் வரிசையில் இந்நூல் மலர்ந்துள்ளது. மதுரை மாநகர் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில், கூடலூர் திருக்கோவில், கிறிஸ்தவ ஆர்ச்பிஷப், மதுரை ஆதீனம், மதுரையில் சமணம், இஸ்லாம், கண்ணகிக்கோட்டம் என, 39 தலைப்புகளில் அரிய, பல செய்திகளை சேகரித்து அற்புதமாய் தொகுத்துத் தந்துள்ளார். பல வண்ணப் படங்கள், நூற்றுக்கும் மேலான கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், விளக்கங்கள் என, புத்தகம் முழுமையும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான புத்தகங்கள், கூடல் மாநகர் பற்றி வெளிவந்தாலும், இந்நூல் ஒரு வித்தியாசமான நூலாகத் திகழ்கிறது. மதுரை மாநகரில் இவ்வளவு செய்திகளா என, வியக்க வைக்கின்ற அளவுக்கு அற்புதமாய் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒரு நல்ல பயண நூல். – குமரய்யா. நன்றி – தினமலர், 10 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published.