மௌனியின் மறுபக்கம்

மௌனியின் மறுபக்கம், ஜே.வி. நாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-837-1.html

தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடியும், சிறுகதைத் திருமூலர் என்று போற்றப்படுபவருமான மௌனியைப் பற்றிய முக்கிய ஆவணம். வெறும் 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, உலகின் சிறந்த சிறுகதையாளர்கள் வரிசையில் இடம்பிடித்தவர் மௌனி. மரபு சார்ந்த சிறுகதை இலக்கியத்தின் பாதையைத் தகர்த்து புதுத்தடம் போட்டவர். 16 ஆண்டுகாலம் மௌனியோடு பழகி அவரின் அன்பைப் பெற்ற பத்திரிகையாளர் ஜே.வி.நாதன், தனது அனுபவங்களோடு, மௌனி அளித்த பேட்டிகள், படைப்புகளுக்கான விமர்சனங்களையும் தொகுத்திருக்கிறார். நிகழ்கால படைப்பிலக்கியத்தை செழுமைப்படுத்த தமிழின் மூத்த ஆளுமைகள் பற்றிய இதுபோன்ற நூல்கள் நிறைய வரவேண்டும். நன்றி: குங்குமம், 17/9/13.  

—-

 

ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, சலீம் அலி, தமிழாக்கம்-நாக வேணுகோபாலன், நேஷனல் புக் ட்ரஸ்ட், நேரு பவன், 5, இன்ஸ்ட்டியூஷன் ஏரியா, வஸந்த் குஞ்ச், புதுடெல்லி 110070, விலை 85ரூ.

பறவைகளையும் அபூர்வ உயிரினங்களையும் தேடிச் செல்வது, அபூர்வமான மன நிலையின் பெரும்பித்து எனலாம். ஒரு பறவையை ஒரே ஒரு முறை என்பதற்காக வாழ்நாளெல்லாம் பயணம் செய்த ஒருவனைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு சிறந்த கதை எழுதியிருக்கிறார். இந்தியாவில் பறவையியல் ஆராய்ச்சியின் அடையாளம் என்றால், அது சலீம் அலிதான். அவருடைய சுயசரிதையின் தமிழாக்கமே இந்த நூல். மிக நீண்ட, கடினமான பயணங்களின் ஊடே அபூர்வமான பறவைகளைத் தேடித் திரிந்த சலீம் அலியின் பயணம் நமது கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரம்மாண்டமான உலகத்தை விரியச் செய்கிறது. இயற்கையின் மர்மச் சுழலில் பறவைகளின் வாழ்க்கை முறை, அவற்றின் புதிரான நடவடிக்கைகள் பற்றிய சலீம் அலியின் டேல்கள் பெரும் வியப்பை ஏற்படுத்துபவை. ஒரு பறவையியல் ஆராய்ச்சியாளன் எதிர்கொள்கிற சவால்களையும் பேரனுபவங்களையும் இந்தப் புத்தகம் முழுக்க நுணுக்கமாக சித்தரிக்கிறார். அபூர்வமான எண்ணற்ற பறவைகள் ஒரு நூற்றாண்டிற்குள் அழிக்கப்பட்டுவிட்ட ஒரு தேசத்தில், சலீம் அலியின் ஆராய்ச்சிகள் நமது இயற்கையைப் பாதுகாப்பதற்கான ஆழமான அறைகூவல். நன்றி: குங்குமம், 17/9/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *