ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம்
ராஜீவ் படுகொலை: தூக்குக் கயிற்றில் நிஜம், திருச்சி வேலுச்சாமி, தொகுப்பு: பா. ஏகலைவன், பேட்ரிஷியா பதிப்பகம், 2/40, பி, இரண்டாம் தளம், ராம் நகர், நங்கநல்லூர், சென்னை – 600061. விலை ரூ. 200
ராஜீவ் படுகொலை, இந்தியத் துணைக்கண்டத்தின் தீராத புதிர். தமிழகத்தில் மூன்று பேரின் கழுத்தில் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்தப் புதிர் குறித்த தீவிரமான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கொடூரமான இந்தக் கொலை குறித்து தீர்க்கப்படாத பல கேள்விகள் இன்றும் இருக்கின்றன. இந்த கேள்விகளின் வாயிலாக ராஜீவ் படுகொலை விசாரணை மக்கள் மனதில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. ‘படுகொலை நடந்த அன்று பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ மறைக்கப்பட்டு விட்டது’ என்ற பெரும் சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. திருச்சி வேலுச்சாமி இந்த நூலில் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோர் மீது பல சந்தேகங்களை எழுப்புகிறார். விசாரணையில் அழிக்கப்படாத புதிர்களையும் நிரப்பப்படாத மௌனங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்றபோதும், இந்தக் குற்றத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களின் தரப்பில் நின்று இந்தப் புத்தகம் வாதாடுகிறது. நன்றி: குங்குமம் 24-12-12