வாழ்புலம் இழந்த துயரம் சாளரம் வெளியீடு 2.1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யு மடிப்பாக்கம் சென்னை 600091
செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இந்த உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் எதிரிகள் என்பதுதான் அந்தப் பிரிவினை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரண்டு பெரும் யுத்தங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா படுகொலை செய்தது மட்டுமல்ல, உலகெங்கும் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கான சூழலையும் அது உருவாக்கியது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய யுத்தத்தையும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய மறைமுக யுத்தத்தையும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா நடத்திய மறைமுக யுத்தத்தையும் சர்வதேச அரசியல் பின்புலத்தில் வைத்து ஆய்வு செய்கிறது. ஈழத் தமிழர் போராட்டம் எத்தகைய சர்வதேச சதித்திட்டங்களின் வழியே அழிக்கப்பட்டது என்பதைப் பல்வேறு காலகட்டங்களிலிருந்து விவரிக்கிறது. விடுதலைப்புலிகளின் வரலாற்று முக்கியத்துவத்தை அழுத்தமாக இந்த நூல் சித்தரிக்கிறது. –மு. புஷ்பராஜன் நன்றி: குங்குமம், 03-09-2012