வாழ்வும் மொழியும்

வாழ்வும் மொழியும், ஜே.ஆர்.இலட்சுமி, மதன்மோனிகா பதிப்பகம், விலை 200ரூ.

ஜவ்வாது மலைவாழ்வின் ஆவணம், செஞ்சி நாயக்கர் வரலாறு, தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், ஆனைமலைக் காடர்கள், வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என வாழ்க்கைமுறை சார்ந்த கள ஆய்வுகளையும், இலக்கியங்கள் மற்றும் சமூக வரலாற்று நூல்களில் மேற்கொண்ட ஆய்வுகளையும் ஆவணப்படுத்திவருகிறார் ஜே.ஆர்.இலட்சுமி.

இந்தப் புத்தகத்தில் ஜவ்வாது மலைவாழ் மலையாளப் பழங்குடிகளின் வாழ்க்கை முறை, நில அமைப்பு, அவர்களின் கலைப் பங்களிப்பு, மொழிநடை உள்ளிட்ட விஷயங்களை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். ஒவ்வொரு சொற்களையும் இங்குள்ளவர்கள் எப்படி உச்சரிக்கிறார்கள் என்பது தொடர்பான பட்டியலும், தரமாக அச்சிடப்பட்டிருக்கும் வண்ணப்படங்களும் மிக முக்கியமான ஆவணங்களாக இருக்கின்றன.

நன்றி: தமிழ் இந்து, 4/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.