வேதம் கண்ட விஞ்ஞானம்
வேதம் கண்ட விஞ்ஞானம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை – 14, விலை: ரூ. 270. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-815-8.html
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களை தொகுத்து கொடுத்து இருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்து கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், ஹெலிகாப்டர், நீர்முழ்கி கப்பல் ஆகியவை அன்றே கையாளப்பட்டு இருந்தன என்பதை பழங்கால நூல்களின் துணையோடு உறுதிப்படுத்தி இருப்பதோடு, அன்றைய காலத்தில் சிறந்து விளங்கிய கலைகள், சான்றோர்கள், பெண் ரிஷிகள் ஆகிய அனைத்து தகவல்களும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டும் இன்றி அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும்.
—
திருவாரூர் கு. தென்னன் வாழ்க்கை வரலாறு, திருவாரூர் துரைச்செல்வம், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானிஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை: ரூ. 110.
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதிக்கும், அவருடைய நெருங்கிய நண்பர் திருவாரூர் கு. தென்னவனுக்கும் இருந்த ஆழமான நட்பை, ”கலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னவன்” என்ற இந்த நூலில் விளக்கியுள்ளார், நூலாசிரியர். தன் மகள் சாகும் தருவாயில் கூட கருணாநிதியுடன் கூட்டத்திற்கு சென்ற தென்னன் நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டு. நூலின் மூலம் கருணாநிதியுன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
—
கருவறை முதல் கல்லறை வரை (பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நூல்), வழக்கறிஞர் சி. அன்னக்கொடி, ஏ. எச். பதிப்பகத்தார், 150, ராஜீவ்காந்தி நகர், ஸ்ரீவில்லிபுத்தூர் – 626135, விலை: ரூ. 125.
சட்டம் பற்றி தெரியாதவர்கள்கூட இந்நூலை படித்தால் வழக்கறிஞர் போல பேசலாம். குறிப்பாக பெண்கள் கையில் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி (3.4.2013).