வேலி
வேலி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 175ரூ.
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்களை படைத்தவரும், பத்திரிகை துறையில் முத்திரை பதித்தவருமான வாஸந்தி படைத்த 14 சிறுகதைகள் கொண்ட நூல். “மனுசத்தனம் இல்லாத குலப் பெருமை நமக்கு வேணாம்! ஒரு பெண்ணோட மனசு எப்படிப்பட்டதுன்னு அவங்களுக்குத் தெரியுமா? பெண்ணுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்கிறது கூடத் தெரியுமா? முகமே இல்லாத கும்பலா போயிட்டோம். இப்படியே வாயை மூடிக்கிட்டு இருந்தோம்னு வெச்சுக்குங்க, நமக்குன்னு அடையாளமே இருக்காது. அவங்க சொல்றதுதான் நியாயம்னு ஆயிடும். அநியாயத்தையும் நியாயம்னு நம்ப வைக்கிற கும்பல் இது” என்று இந்த சமுதாயத்தை நோக்கி சாடுகிறாள் ‘வேலி’ கதையின் நாயகி சுஷ்மா. பெண்ணின் உரிமைக்காக போராடிய அவளின் கதாபாத்திரமும், மற்ற சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்களின் படைப்பும் நெஞ்சை விட்டு அகலாத உயர்ச்சித்திரங்கள். நன்றி: தினத்தந்தி, 10/2/2016,