2 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை
ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை, சேத்தன், ஜெய்கோ பப்ளிஷிங், மும்பை, பக். 362, விலை 199ரூ.
2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம் பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிர்ஷ்சிட்டி பேங்கில் வேலை செய்தாலும் சொந்த ஊரான டில்லியை விடுத்து காதலிக்காக சென்னை வருகிறார். முன்னதாக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இரு குடும்பத்தாரையும் சந்திப் பேச வைக்க திட்டமிடுகின்றனர். இரு குடும்பத்தாரும் மனகசப்பில் பிரிகின்றனர். இதுவே இவர்களின் திருமணத்துக்குத் தடையாக உள்ளது. காதலித்தவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று பகீரத பிரயத்னம் செய்கின்றனர். பலப்பல தடைகள். மனநலம் பாதிப்பில் கிரிஷ். கிரிஷின் குடும்பத்தில் ஒட்டாத, மகன் மீது பாசமில்லாத தந்தை, கடைசியில் அவரது முயற்சியில் திருமணம் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார் அனன்யா. இதுவே கதையின் சாராம்சம். மொழிக்கு அப்பாற்பட்டது காதல், பெற்றோரின் சம்மதத்துடன் வெற்றி பெறுவது எப்படி? என்ற கதைக்கரு அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இயல்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 20/10/2014.