வேதபுரத்து நாயகிகள்
வேதபுரத்து நாயகிகள், ச. கணபதி ராமன், வெர்சோ பேஜஸ், புதுச்சேரி, பக். 160, விலை 100ரூ.
மாரியம்மன் கோயில்கள் புதுச்சேரியில் தோன்றிய விதம், மாரி மழை என்பதன் விவரம், மாரியம்மனின் வரலாறு, அம்ன் கோயில்கள் இருக்கும் இடங்கள், அதனையொட்டிய தல வரலாறுகள், வழிபாட்டு முறைகள், இந்நூலில் எளிமையாக சொல்லப்பட்டிருக்கின்றன. கிராம மக்களின் வழிபாடு கடவுள்கள் சிறுதெய்வங்களே என்பதைச் சொல்லி, ஏழை மாரியம்மன் கோயில் முதல் பச்சை வாழி அம்மன், அங்காள பரமேஸ்வரி, துரோபதையம்மன், செங்கழுநீர் அம்மன், காமாட்சி, தளிங்சி காளியம்மன், படவெட்டி மாரியம்மன், ரோணுகா தேவி, தண்டு முத்து மாரியம்மன், வேதவல்லி நாச்சியார், காரைக்கால் அம்மன் என சுமார் 31 கோயில்களைப் பற்றி விவரித்திருக்கிறார் ஆசிரியர். கோயில் பற்றிய விவரங்களை அங்கு வாழும் மக்களிடமிருந்து நேரடியாகப் பெற்று அதையே பிரதானமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஆனால் இன்னும் விவரமாகத் தொகுதித்திருக்கலாம். மாரியம்மனின் அவதாரம் பற்றிய செவிவழிக் கதைகள், கோயில்களில் உள்ள இதர தெய்வங்கள் பற்றிய விவரம், கூழ்வார்த்தலின் நோக்கம், கொண்டாடப்படும் திருவிழாக்கள் என தொகுக்கப்பட்டுளள்ன. புதுச்சேரியில் உள்ள அம்மன் கோயில்கள் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவும். நன்றி: தினமணி, 1/12/2014.
—-
அஷ்டாவக்ர மகா கீதை, கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை (2பாகங்கள்) 700ரூ.
மனித சமுதாயத்திடம் பற்பல சாத்திரங்கள் உள்ளன. ஆனால் அஷ்டாவக்ர கீதைக்கு ஒப்பான தத்துவ சாத்திரம் எதுவும் இல்லை. வேதங்கள் கடினமானவை. உபநிடதங்கள் தணிந்த குரலில் பூடகமாகப் போதிப்பவை. பகவத் கீதையில் அஷ்டாவக்ர கீதைக்கும் சமமான சிறப்பு இல்லை. இதன் தனிச்சிறப்பு அற்புதமானது என்கிறார் ஓஷோ. அவரது தத்துவ சொற்பொழிவில் சிறு சிறு கதைகள் சிறு சிறு கதைகள் இடம் பெற்றிருப்பது படிப்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இந்தி மூலத்திலிருந்து தமிழில் எளிமைப்படுத்தியிருக்கிறார் ர.சவுரிராஜன். நன்றி: தினத்தந்தி, 3/12/2014.