வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள்
வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதிய கடிதங்கள், தொகுப்பாசிரியர் கழனியூரன், மேன்மை வெளியீடு, பக்.368, விலை ரூ.275. எழுத்தாளர் வல்லிக்கண்ணன், திறனாய்வாளர் தி.க.சி.க்கு எழுதிய 161 கடிதங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நூல் இது. தி.க.சி. வல்லிக்கண்ணனைக் ‘குருநாதர் 39‘ என்று குறிப்பிட்டாலும், வல்லிக்கண்ணனின் ‘பிரிய சகோதரராகவே 39‘ அவர் இருந்திருக்கிறார். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், இலக்கிய இதழ்கள், இலக்கியக் கூட்டங்கள், கூட்டங்களில் நடந்த கலாட்டாக்கள், மழை பெய்தது, பெய்யாமல் வெயில் கொடுமைப்படுத்தியது என எல்லா விஷயங்களையும் வல்லிக்கண்ணன் தி.க.சி.க்கு எழுதியுள்ளார். சுவாரசியமான பல தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]
Read more