உறவுகள் பலவிதம்

உறவுகள் பலவிதம், சந்திராமனோகரன், ஒலிவியா பதிப்பகம், பக்.164, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனையுள்ள, இளைஞர்கள் கூட்டணி அமைத்து, வேர்கள் இறுகிப்போனாலும் விழுதுகள் மரத்தைத் தாங்கி நிற்கும் என்ற கருத்தை ஆழமாகப் பதிவு செய்யும் புதினம். பழைய சாதி சமய முரண்பாடுகளை முறியடித்து அவர்கள் புதுயுகம் படைக்கிறார்கள். கார்த்திக், கல்பனா, மணிவண்ணன் நம் வாழ்வின் நிஜங்கள். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ. பெண்முகம் ‘நானும் கவிதையும் வேறுவேறல்ல, கவிதை பெயரிடப்படாத நான், நான் பெயரழிந்த கவிதை’ என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார். பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது. உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், ஆர். கல்யாண மல்லி, அழகு பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. மனித வாழ்க்கையில் தோன்றும் பல்வேறு பிரச்னைகளையும் எப்படி எதிர்கொண்டு வாழ வேண்டும் என்ற வழிமுறைகளைக் கூறுபவைதான் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்கள். குறிப்பாக பெண்ணாசையும், மண்ணாசையும் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. அவை முறையற்றதாக இருந்தால், என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை, பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு விளக்கி, மனித வாழ்க்கைக்குரிய அறத்தைப் போதிப்பதால், இவை இன்றும் போற்றப்படுகின்றன. மஹாபாரதம் முடிந்த சமயத்தில்தான் கலியுகம் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்கள், […]

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் அ. பன்னீர் செல்வம், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. பொருள் அறிவியல் என்றால் என்ன? அதன் குறிக்கோள், நோக்கம் யாது? அவை எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? என்பன போன்ற உள்ளடக்கங்களுடன் கூடிய நூல். பி.எட். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயன்பெறும் வகையில் அதன் சிறப்புப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட முதல்நூல் இது. மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கும் பணியில் இந்நூல் சிறப்பிடம் பெறும். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன்

மௌனத்தின் மொழிபெயர்ப்பாளன், ஜெயசிவா, நந்தவனம் பதிப்பகம், பக். 64, விலை 60ரூ. மனித வாழ்வின் யதார்த்தத்தையும் சமூகத்தின்மேல் உள்ள கோபத்தையும் நமக்கு மொழிபெயர்த்துத் தந்து மனதின் ஆழத்தில் பதித்துவிட்டுச் செல்கிறார் கவிஞர் ஜெயசிவா. தவிக்கிறது தமிழ்க் குழந்தை தாய்பாலுக்காக ஆங்கிலப்பள்ளிகளில் -கவிஞரின் தவிப்பு நம்மையும் தவிக்க வைக்கிறது. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள்

புகழ்பெற்ற பஞ்ச தந்திரக் கதைகள், எஸ். தமயந்தி, சுவாமிமலை பதிப்பகம், பக். 176, விலை 60ரூ. நீதியை கதைகள் வாயிலாகக் கூறி, இளம் உள்ளங்களை ஒழுக்க நெறிக்கு இட்டுச் செல்வதால் பஞ்ச தந்திரக் கதைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகின்றன. கதைகளை விலங்குகள் மூலம் சொல்லுவதால் சொல்ல வந்த கருத்துக்கள் இன்னும் ஆழமாகப் பதிகிறது. மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய இனிய நடையில் நூல் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?

மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி?,  மரியா கொலாசோ, கிளாவெல்; தமிழில் சிவசுப்ரமணிய ஜெயசேகர்; அடையாளம், பக்.264, விலை ரூ.190. அமெரிக்காவின் ரோசெஸ்டர் நகரில் தொடங்கப்பட்ட மேயோ கிளினிக், இன்று பல பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. அதை நடத்துபவர்கள் தங்களுடைய அனுபவம், அறிவின் அடிப்படையில் பல நோய்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக நூல்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இந்நூல். நீரிழிவு நோய் சிறுவர், பெரியவர், ஆண், பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் வரக்கூடிய நோயாக இருக்கிறது. போதிய உடற்பயிற்சியின்மை, உணவுமுறை, வாழ்க்கைமுறை […]

Read more

விடம்பனம்

விடம்பனம், சீனிவாசன் நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், பக்.392, விலை ரூ.575. இந்நூலை ‘நாவல் 39‘ என்று கூறி பதிப்பித்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நாவலுக்குஉரிய எந்தவிதமான இலக்கணமும் இதில் இல்லை. தெளிவான கதை இல்லை; தொடர்ச்சியாகச் செல்லும் சம்பவங்கள் இல்லை; பல கதைகளின், சம்பவங்களின், தகவல்களின் தொகுப்பாக உள்ள இந்நூலில், எதுவுமே முழுமையான கதையாகப் பதிவு செய்யப்படவில்லை. பல காலங்களில், பல இடங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், பல மனிதர்களின் மனக் குரல்களையே இது எதிரொலிக்கிறது. அதனால், இந்நாவலை வாசிப்போர்க்கு முதலில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தேவை. […]

Read more

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ. இந்நூலாசிரியர் 1950-80-களில் தனது ‘கல்கண்டு’ பத்திரிகையில், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற செய்திகளை வெளியிட்டு, பத்திரிகை உலகின் பாராட்டைப் பெற்றவர். ஜோதிடம், நாடகம், திரைப்படம், சித்தமருந்து, பல்பொடி தயாரிப்பு… என்று பல துறைகளிலும் இறங்கி, சுமார் 500 நூல்களை எழுதி சாதனை புரிந்தவர். தமிழ் பத்திரிகை உலகில் கேள்வி – பதில் பகுதியை ‘கல்கண்டு’ பத்திரிகையில் அறிமுகம் செய்து, வாசகர்களில் பலவகையான கேள்விகளுக்கும் சுவையான பதில்களை அளித்தவர். […]

Read more

விசும்பின் துளி

விசும்பின் துளி,  நாஞ்சில் நாடன், விஜயா பதிப்பகம்,  பக்.344, விலை ரூ.220. இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது. படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல நூல்களுக்கு நூலாசிரியர் எழுதிய முன்னுரைகளும் உள்ளன. படைப்புகளைப் பற்றியும், படைப்பாளிகளைப் பற்றியும் அவரின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எழுத்தாளர் ஜெயமோகன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பல படைப்பாளிகளுடனான நூலாசிரியரின் […]

Read more
1 6 7 8 9