எரியத் துவங்கும் கடல்
எரியத் துவங்கும் கடல், அ.வெண்ணிலா, அகநி, விலை 275ரூ.
பெண்முகம்
‘நானும் கவிதையும்
வேறுவேறல்ல, கவிதை
பெயரிடப்படாத நான்,
நான் பெயரழிந்த
கவிதை’
என்ற நூலின் முகப்பிலேயே குறிப்பிடும் கவிஞர் வெண்ணிலா இந்த கவிதைத் தொகுப்பில் தன் மொத்த கவியுலகத்தையும் பார்வைக்கு வைக்கிறார்.
பொதுவாக கவிதை என்பதை மொழி தெரிந்த யார் வேண்மாடுனாலும் எழுதிவிடக்கூடும். ஆனால், அதன் பின்னால் இயங்கும் பித்துப்பிடித்த கவிமனம் தான் கவிஞருக்கும் ‘தொழில் நுட்பவாதிகளுக்கான’ வித்தியாம். வெண்ணிலாவின் கவி உள்ளம் நெகிழ்ச்சியானது.
உறவுகளை, உணர்வுகளை, வாழ்வை, சூழலை நெகிழ்வோடு காண்கிறார். அப்பாவை, மகளை, காதலனை, கணவனை, நண்பனை – உச்சகட்ட அன்போடு பார்க்கும் வரிகளில் வெண்ணிலா உயர்ந்து நிற்கிறார். அவருக்கு
‘மனசெல்லாம் பார்வை
பார்க்குமிடமெல்லாம் மனசு’.
இத்தொகுப்பில் ‘அறைகளால் ஆனவள்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அனைத்துமே தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமானவை. வேலைக்குச் செல்லும் மணமான, குழந்தைபெற்ற பெண்களின் தவிப்பை சொற்களில் நிரப்பி வாசகனுக்குக் கடத்துகிறார்.
அம்மாவின் அருகாமைக்கு ஏங்கும்
குழந்தையின் இயல்பும்
அன்னியமாகப்படும் அவசரத்திற்கு
கூசிப்போகிறது மனசு.
-இந்த வரிகளில் தெரியும் பரிதவிப்பை இத்தொகுப்பு முழுக்க அடையாளம் காணமுடியும். அது அன்றாடம்,நாம் காணும் பெண்களின் முகங்களில் பிரதிபலிப்பது. உணர்வுகளின் தெறிப்பால் உயர்ந்து நிற்கிறது இத்தொகுப்பு.
நன்றி: அந்திமழை, 1/2/2017.